தமிழ்நாடு

பழைய விதியால் புதிய தலைவலி கட்டட அனுமதி வாங்கியோர் தவிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை :சென்னை பெருநகர் பகுதியில், பழைய வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டடங்களில், புதிய பொது கட்டட விதிப்படி விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நகர், ஊரமைப்பு சட்டப்படி, சென்னை பெருநகர் பகுதியில் கட்டுமான திட்ட அனுமதி வழங்க, வளர்ச்சி விதிகள், 2008ல் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே, சி.எம்.டி.ஏ., மற்றும் உள்ளாட்சிகள் கட்டுமான திட்ட அனுமதி

சென்னை :சென்னை பெருநகர் பகுதியில், பழைய வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டடங்களில், புதிய பொது கட்டட விதிப்படி விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நகர், ஊரமைப்பு சட்டப்படி, சென்னை பெருநகர் பகுதியில் கட்டுமான திட்ட அனுமதி வழங்க, வளர்ச்சி விதிகள், 2008ல் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே, சி.எம்.டி.ஏ., மற்றும் உள்ளாட்சிகள் கட்டுமான திட்ட அனுமதி வழங்கி வந்தன.இந்நிலையில், பொது கட்டட விதிகள், 2019 பிப்., 4ல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையிலேயே, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியும்.இதில், 2008 வளர்ச்சி விதிப்படி அனுமதி பெற்று, மக்கள் வீடு, வணிக நிறுவனங்களை கட்டியுள்ளனர். இந்த கட்டடங்களில் கூடுதல் தளம் போன்ற விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிடுவோர், அதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகுகின்றனர்.இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:பழைய விதிப்படி கட்டப்பட்ட கட்டடங்களை விரிவாக்கம் செய்ய, பொது கட்டட விதிகளின் அடிப்படையில் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்தால், அதிகாரிகள் அதில் பல்வேறு புதிய ஆட்சேபனைகளை தெரிவிக்கின்றனர்.தளபரப்பு குறியீடு, பக்கவாட்டு காலி இடம், கட்டட உயரம் போன்ற விஷயங்களில் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாக, கட்டட உயரம் தொடர்பாக, பழைய விதி அனுமதித்த நிலை, புதிய விதியில் வேறு வகை கட்டடமாக வகைப்படுத்துகிறது.இதனால், பழைய கட்டடத்தை வரன்முறை செய்து வருமாறு, அதிகாரிகள் கூறுகின்றனர். பெரிய கட்டுமான திட்டங்களுக்கு, சி.எம்.டி.ஏ.,வில் நேரடியாக விண்ணப்பித்து வரன்முறை செய்யலாம்.சிறிய அளவிலான குடியிருப்புகள், தனி வீடுகள் கட்ட, உள்ளாட்சி அமைப்புகளையே நாடுகிறோம். அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு இது விஷயத்தில் முடிவு எடுக்க வழி தெரியவில்லை. இதனால் ஏராளமான கோப்புகள் நிலுவையில் போடப்படும் நிலை ஏற்படுகிறது.சி.எம்.டி.ஏ., நிர்வாகம் இதில் உரிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும். அப்போது தான் வீடு கட்டும் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X