கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பட்டா மாறுதல் கோரி 6 லட்சம் மனுக்கள் நிலுவை :உயர்நீதிமன்றத்தில் தகவல்

Added : அக் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:பட்டா மாறுதல் கோரி 6 லட்சத்து 13 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நில அளவை மற்றும் நிலவரித்திட்ட கூடுதல் இயக்குனர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.நில உட்பிரிவு செய்தல் மற்றும் பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பல்வேறு வழக்குகள் தாக்கலாகின.

மதுரை:பட்டா மாறுதல் கோரி 6 லட்சத்து 13 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நில அளவை மற்றும் நிலவரித்திட்ட கூடுதல் இயக்குனர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.நில உட்பிரிவு செய்தல் மற்றும் பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பல்வேறு வழக்குகள் தாக்கலாகின. நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.

தமிழக அரசுத் தரப்பு: 440 சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு பயிற்சி முடித்துவிட்டனர். அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நில நிர்வாக கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.2021 மார்ச் 31 ல் 5 லட்சத்து 55 ஆயிரத்து 16 மனுக்கள் நிலுவையில் இருந்தன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட்வரை 6 லட்சத்து 44 ஆயிரத்து 250 மனுக்கள் பெறப்பட்டன.

இதே காலக்கட்டத்தில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 48 மனுக்கள் பைசல் செய்யப்பட்டன. 1500 சர்வேயர்கள் பணியில் ஈடுபட்டனர். செப்.,1 ல் 6 லட்சத்து 13 ஆயிரத்து 218 மனுக்கள் நிலுவையில் உள்ளன.சட்டசபை தேர்தல் பணியில் (மார்ச், ஏப்ரல்) சர்வேயர்கள் ஈடுபட்டனர். மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில வழக்குகளில் நீதிமன்ற உத்தரவால் இப்பணியில் வி.ஏ.ஓ.,க்களை ஈடுபடுத்த முடியவில்லை. இதனால் பட்டா மாறுதல் பணி பாதித்தது.நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என தெரிவித்தது.

நீதிபதி: இந்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மனுக்களை பைசல் செய்ய அரசுத் தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் 6 லட்சத்திற்கு மேல் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைத்திருப்பது இந்நீதிமன்றம் மற்றும் அரசு பிறப்பித்த உத்தரவுகளுக்கு முரணானது. மேல்நடவடிக்கை குறித்து நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் இயக்குனர், நில நிர்வாக கமிஷனர் அக்.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நில அளவை மற்றும் நிலவரித்திட்ட கூடுதல் இயக்குனர் அக்.,6 ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202120:55:33 IST Report Abuse
natesa If people ready to spend money, no issues.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X