தமிழ்நாடு

தேனி, திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள்... எதிர்பார்ப்பு:வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வலியுறுத்தல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டிதேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் இணைப்புக்கான பாலம் ஆண்டிபட்டி - நடுக்கோட்டை வைகை ஆற்றின் குறுக்கே அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி மாவட்டம்,பெரியகுளம் தாலுகா, ஏ.வாடிப்பட்டி வைகை ஆற்றின் ஒரு கரையிலும், ஆண்டி பட்டி, புள்ளிமான்கோம்பை நடுக்கோட்டை ஆற்றின் மறு கரையிலும் உள்ளது. ஏ.வாடிப்பட்டியில் இருந்து பொதுமக்கள், அன்றாடம் வர்த்தகம் உள்ளிட்ட
 தேனி, திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள்... எதிர்பார்ப்பு:வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டிதேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் இணைப்புக்கான பாலம் ஆண்டிபட்டி - நடுக்கோட்டை வைகை ஆற்றின் குறுக்கே அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டம்,பெரியகுளம் தாலுகா, ஏ.வாடிப்பட்டி வைகை ஆற்றின் ஒரு கரையிலும், ஆண்டி பட்டி, புள்ளிமான்கோம்பை நடுக்கோட்டை ஆற்றின் மறு கரையிலும் உள்ளது. ஏ.வாடிப்பட்டியில் இருந்து பொதுமக்கள், அன்றாடம் வர்த்தகம் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆண்டிபட்டிக்கு வந்து செல்கின்றனர்.

ஆண்டிபட்டியில் இருந்து பலரும் ஏ.வாடிப்பட்டிக்கு ஆற்றில் நீர் வரத்து இல்லாத காலத்தில் ஆற்றைக்கடந்து எளிதில் சென்று விடுகின்றனர். ஆற்றில் நீர் வரத்து காலத்தில் ஏ.வாடிப்பட்டியில் இருந்து ராம்நாயக்கன்பட்டி வழியாக 8 கி.மீ.,துாரம் அல்லது டி.அணைக்கரைப்பட்டி வழியாக 14 கி.மீ.,துாரம் சுற்றிஆண்டிபட்டி வர வேண்டும்.
மழைக்காலத்தில் குறுக்கு வழியாக ஆற்றைக்கடந்து செல்வது ஆபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. ஏ.வாடிப்பட்டி -நடுக்கோட்டை கிராமங்களை இணைக்க வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.நிதி ஒதுக்க வேண்டும்

புள்ளிமான்கோம்பை ஊராட்சி தலைவர் தவசி கூறியதாவது: நடுக்கோட்டை வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சர்வே செய்யப்பட்டு சமீபத்தில் மண் ஆய்வும் நடந்தது. பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிதுவக்க வேண்டும். புதிய பாலம் அமைவதால் விவசாயிகள் விளைபொருட்களை பல்வேறு பகுதிக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும். புள்ளிமான்கோம்பை - வத்தலக்குண்டு ரோட்டில் குறுகலாக உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் சரியாகும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X