தமிழக வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூல்

Added : அக் 01, 2021
Share
மூணாறு:மூணாறு --உடுமலைபேட்டை ரோட்டில் ஒன்பதாறு பகுதியில் தமிழக வனத்துறையினர் விதிமுறைகள் மீறி நுழைவு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மூணாறு - -உடுமலைபேட்டை ரோட்டில் உள்ள சின்னார் இரு மாநில எல்லை பகுதியாகும். அங்கிருந்து தமிழக பகுதிக்குள் நுழையும்போது ஆனமலை புலிகள் காப்பகம் துவங்குகிறது. சின்னாரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஒன்பதாறு உள்ளது.அந்த
 தமிழக வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூல்

மூணாறு:மூணாறு --உடுமலைபேட்டை ரோட்டில் ஒன்பதாறு பகுதியில் தமிழக வனத்துறையினர் விதிமுறைகள் மீறி நுழைவு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மூணாறு - -உடுமலைபேட்டை ரோட்டில் உள்ள சின்னார் இரு மாநில எல்லை பகுதியாகும். அங்கிருந்து தமிழக பகுதிக்குள் நுழையும்போது ஆனமலை புலிகள் காப்பகம் துவங்குகிறது. சின்னாரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஒன்பதாறு உள்ளது.அந்த வழியில் கேரளாவுக்கு வரும் வாகனங்களுக்கு திருப்பூர் வனப் பிரிவு ஆனமலை புலிகள் காப்பகம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நபர் ஒன்றுக்கு ரூ.30ம், சிறிய ரக வாகனங்களுக்கு ரூ.50ம் என தரம் வாரியாக ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பதாக கூறும் வனத்துறையினரால்பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.வெளி மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என விதி மீறி தமிழக வனத்துறையால் எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மூணாறு வர்த்தக சங்கத்தினர் தமிழக முதல்வர் தனிபிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X