ரோடு சேதம்; பொதுமக்கள் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோடு சேதம்; பொதுமக்கள் அவதி

Added : அக் 01, 2021
Share
தேனி:தேனி வட்டார போக்கு வரத்து அலுவலக நுழைவுப்பகுதியில் சேதமடைந்துள்ள ரோடால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.இந்த அலுவலகத்துக்கு ஓட்டுனர் உரிமம், வாகன சான்று பெறுதல், புதுப்பித்தல், வாகன பதிவு உள்பட பல்வேறு பணிகளுக்கு தினமும் ஏராளமானவர்கள் கார், பஸ், டூவீலர்களில் வந்து செல்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தாலும் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் உள்ள ரோடு நீண்ட
 ரோடு சேதம்; பொதுமக்கள் அவதி

தேனி:தேனி வட்டார போக்கு வரத்து அலுவலக நுழைவுப்பகுதியில் சேதமடைந்துள்ள ரோடால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

இந்த அலுவலகத்துக்கு ஓட்டுனர் உரிமம், வாகன சான்று பெறுதல், புதுப்பித்தல், வாகன பதிவு உள்பட பல்வேறு பணிகளுக்கு தினமும் ஏராளமானவர்கள் கார், பஸ், டூவீலர்களில் வந்து செல்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தாலும் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் உள்ள ரோடு நீண்ட காலமாக சேதமடைந்துஉள்ளது.

குண்டும், குழியுமான ரோடால் மக்கள் சிரமப்படுகிறார்கள். ஆங்காங்கே கிடக்கும் ஜல்லி கற்களால் டூவீலர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X