இது உங்கள் இடம்: முதல்வரின் கணக்கில் இடம்பெற்ற வாக்குறுதிகள்!

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (75) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களுக்குள், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமைப்பட்டு கொள்கிறார்.தி.மு.க., 505 வாக்குறுதிகள் அளித்தாலும், அதில் சிலவற்றை தான்
MK Stalin, Stalin, DMK, CM Stalin


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களுக்குள், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமைப்பட்டு கொள்கிறார்.

தி.மு.க., 505 வாக்குறுதிகள் அளித்தாலும், அதில் சிலவற்றை தான் மக்கள் எதிர்பார்த்து ஓட்டு அளித்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என வாக்குறுதி வழங்கினர். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இதை தானே, முந்தைய அ.தி.மு.க., அரசும் செய்தது... தி.மு.க., அரசின் தீர்மானத்தால், எந்த பயனும் விளையப் போவதில்லை.நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா நிவாரணம் 4,000 ரூபாய், ஆவின் பால் விலையில் 1 லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு ஆகிய மூன்று வாக்குறுதிகளை மட்டுமே, தி.மு.க., அரசு முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது.


latest tamil news


கொரோனா நிவாரணத்தைப் பொறுத்தவரை, முந்தைய பழனிசாமி அரசும் இதே போன்ற நிதியுதவி வழங்கியிருக்கிறது.பெட்ரோல் விலையில் 1 லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என வாக்குறுதி அளித்து விட்டு, இப்போது 3 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளனர். டீசலுக்கு, 3 ரூபாய் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க.,வின் வெற்றிக்கே கீழ்கண்ட வாக்குறுதிகள் தான் பிரதான காரணமாக இருந்தன.

* இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் வழங்கப்படும்
* அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை அமல்படுத்தப்படும்
* எல்.பி.ஜி., காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் அளிக்கப்படும்
* மின் கட்டணம் மாதந்தோறும் கணக்கிடப்படும்
* ரேஷன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்; உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்
* கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* பழங்குடியினர் பட்டியலில், மீனவர் சேர்க்கப்படுவர். மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படும்
* சாலையோர சிறு வியாபாரிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்
* முதியோர் ஓய்வூதிய தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்
* தொழில் நிறுவனங்களில் 75 சதவீத பணியிடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படும்
* நெல்லுக்கு ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2,500 ரூபாய்; கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தப்படும்
இப்படி முக்கிய வாக்குறுதிகள் எதையும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. சிலை அமைத்தல், மணிமண்டபம் கட்டும் அறிவிப்பு எல்லாம், முதல்வர் ஸ்டாலினின் கணக்கில் வருகிறதே தவிர, முக்கியமான வாக்குறுதிகள் ஏதும் அதில் இடம்பெறவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
02-அக்-202105:24:40 IST Report Abuse
Arachi ஆறுமுகசாமி கமிஷன் என்ற படம் வருடக்கணக்காக ஓடிட்டு இருக்கு. இதை ரசிப்பாங்க.ஆனால் நீட்டுக்காக் அமைத்த கமிஷன் முடிந்து ரிப்போர்ட்டும் வாங்கியாச்சி. அதிமுக அமைச்சர்களுக்கு ஒரே கொள்கைதான். தலைவி எவ்வழியோ அவ்வழியே தொண்டர்களும்.அதான் ஜெயிலுக்கு போகிறதில்.
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
02-அக்-202104:35:36 IST Report Abuse
Arachi அதிமுக ஆட்சியைவிட்டு இறங்குபோது கொரானா எண்ணிக்கை நாளொன்றுக்கு 36000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. வெளியில் கூட வரமுடியத நிலை அன்று. இன்று கட்டுப்படுத்தப்பட்டு சுதந்திரமாகவும் பயமின்றியும் இருக்கிறோமே யாரு காரணம் முதல்வர் எடுத்த முயற்சி தானே.இது ஒன்றிற்கே அவரை வாழ்நாள் முழுவதும் பாராட்டலாம். நீட் தேர்வு ரத்து செய்து ஆணைவழங்குவதென்ன அரசு என்ன Xerox மிஷினா.கொள்ளை அடித்து ஜெயிலுக்குப்போக ரெடியாக இருக்கிறவர்களுக்கு வக்காலத்து வாங்குங்க.ஆறுமுகசாமி கமிஷனுக்கு ஆறுமாதம் மேல் ஆகிறது. அப்படியென்றால் சட்டசிக்கல் இருக்கும் நீட்டை ஒழிக்க டைம் கொடுக்கமாட்டீங்க.10 வருட ஆட்சியில் சின்னாபின்னாயிருக்கிறது தமிழ் நாடு. கொள்ளையோ கொள்ளை. ஒவ்வொரு ஆபிசிலும் ரூம் போட்டு பணம் வசூல் பண்ணினானுங்க. நீட்டும் ஒழியும் ஹிந்தி ஒழிந்தது மாதிரி.சென்னை ஏர் போர்ட் முதல் வாசலிலே ஹிந்தி பேசுறவர் தான் நிற்கிறார்.அவனுகளுக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியவில்லை.ஆனால் மும்பையில் ஏர்போர்ட்.டில் சென்னையிலிருந்து போனவர் கவுண்டரில் ஆங்கிலத்தில் பேசினால் ஹிந்தியில் பேசினால் தான் பதில் சொல்வேன் என்பது நியாயமா,இது ஒரு நண்பருக்கு நடந்தது.மாற்றம் தேவை. நேரம் வரும் எல்லாவற்றிருக்கும். எதெல்லாம் செய்திருக்கிறார்களொ அத்ற்கெல்லாம் டிக் போட்டுக்கங்க. நிச்சயம் முதல்வர் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் டாட்டா காட்டமாட்டார் வாக்குறுதிகளுக்கு. நினத்துப்பாருங்கள் இந்தமுறையும் அதிமுக ஆட்சி வந்திருந்தால் தமிழ் நாட்டு நிலமை என்ன ஆயிருக்கும். இங்கேயும் இருக்கிறாங்க ஓண்ணும் செய்யமுடியல. அதுதான் உண்மை
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-அக்-202102:24:58 IST Report Abuse
Natarajan Ramanathan எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. பழைய பென்ஷன் திட்டம் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அதுபோல மீனவர்களுக்கு எதற்கு நிவாரணம்? அவர்கள் வருஷம் முழுதும் லட்சங்களில் சம்பாதிக்கும்போது ஒத்த ரூபாய்கூட வரியாக கட்டுவதில்லை. உண்மையில் மீன்பிடிக்கு தடைகாலமே தேவையில்வை. எந்தநாட்டிலும் கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X