சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு குட்கா கடத்திய 3 பேர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
வானுார்-பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் நாவற்குளம் சந்திப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திண்டிவனம் பகுதியில் இருந்து

வானுார்-பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் நாவற்குளம் சந்திப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திண்டிவனம் பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த சுசூகி காரை சோதனை செய்தனர். அதில், 5க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் பெங்களூருவைச் சேர்ந்த குய்யாராம் மகன் ராஜேஷ்குமார், 32; பெங்களூருவில் இருந்து புதுச்சேரி, சின்ன சுப்ராயப்பிள்ளை தெருவைச் சேர்ந்த அருமாத்சிங் மகன் மோகன்லால், 23; என்பவருக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, ராஜேஷ்குமார் மூலம், மோகன்லாலை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மோகன்லாலும், புதுச்சேரி தென்னஞ்சாலையைச் சேர்ந்த மாங்கிலால் மகன் மகேந்தர், 36; என்பவரும் சேர்ந்து கலைவாணர் நகரில் குடோன் எடுத்து, குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.அதன் பேரில், ராஜேஷ்குமார், மோகன்லால், மகேந்தர் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், குடோனில் 32 மூட்டைகளில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 கிலோ குட்கா மற்றும் 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மாருதி கார்கள், 4 மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X