ரூ.8 லட்சம் சில்லரை காசுகள் பறக்கும் படையிடம் சிக்கியது..| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.8 லட்சம் சில்லரை காசுகள் பறக்கும் படையிடம் சிக்கியது..

Added : அக் 01, 2021
Share
திருக்கோவிலுார்,-திருக்கோவிலுார் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.8 லட்சம் சில்லரை காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாபு, தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் மற்றும் போலீசார் டி.அத்திப்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சித்துாரில்

திருக்கோவிலுார்,-திருக்கோவிலுார் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.8 லட்சம் சில்லரை காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாபு, தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் மற்றும் போலீசார் டி.அத்திப்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சித்துாரில் இருந்து திருச்சி, துறையூர் நோக்கிச் சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 80 மூட்டைகளில் 5 ரூபாய் மற்றும் ஒரு ரூபாய் நாணயங்கள் 8 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.டிரைவர் விஜயகுமார், கிளீனர் குமார், உடன் வந்த பெரியசாமி ஆகியோர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட நாணயங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி வசம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பெரியசாமி துறையூரில் மளிகைக் கடை உரிமையாளர் என்பதும், சித்துாரில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து சில்லரை காசுகளாக மாற்றி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை சர்வ சாதாரணமாக சாக்கு மூட்டைகளில் திறந்த வேனில் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X