சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கடலுார்-சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு கடலுார் போக்சோ கோர்ட் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தீவலுார் கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார், 26; இவருக்கு மொபைல் போனில் மிஸ்டு கால் மூலம் விருத்தாசலம் பகுதியில் பாட்டி வீட்டில் தங்கியிருந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரே சமூகத்தை சேர்ந்த

கடலுார்-சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு கடலுார் போக்சோ கோர்ட் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தீவலுார் கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார், 26; இவருக்கு மொபைல் போனில் மிஸ்டு கால் மூலம் விருத்தாசலம் பகுதியில் பாட்டி வீட்டில் தங்கியிருந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரே சமூகத்தை சேர்ந்த இருவரும் 2013 முதல் காதலித்தனர். பாட்டி வீட்டில் இல்லாத போது வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி, அச்சிறுமியை சதீஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தற்கொலைக்கு முயன்ற சிறுமியை உறவினர்கள் காப்பாற்றினர். பின், 2016 மே 27ம் தேதி சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். இதனால் சதீஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோரை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, சதீஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் உட்பட 7 பேரை கைது செய்து கடலுார் போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார். குற்றவாளி சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம், கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் மற்ற 6 பேர் விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X