மொத்தமாக மது விற்ற மூன்று பேர் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொத்தமாக மது விற்ற மூன்று பேர் 'சஸ்பெண்ட்'

Added : அக் 01, 2021
Share
விழுப்புரம்-மொத்தமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த, டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலக செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் வேலு. இருவரும் 1,920 மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர்.இவர்களை கள்ளக்குறிச்சி போலீசார் கைது

விழுப்புரம்-மொத்தமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த, டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலக செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் வேலு. இருவரும் 1,920 மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர்.இவர்களை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். இந்த நபர்களுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக கள்ளக்குறிச்சி நகரில் கச்சிராயபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர் பெரியசாமி, விற்பனையாளர்கள் முனுசாமி, பாலு ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.இதையடுத்து, பெரியசாமி, முனுசாமி, பாலு ஆகிய மூவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.கலெக்டர் அறிவுரையின்படி முறைகேடாக மதுபானங்கள் விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X