டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Added : அக் 01, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் 1.80 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்., விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், மாவட்ட ஆய்வுக்குழுத் தலைவர் ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் பாலமுருகன், விஜயதாஸ், நரசிம்மராவ், கவுஸ்பீர் ஆகியோர், சென்னை நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர்
 டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் 1.80 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்., விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், மாவட்ட ஆய்வுக்குழுத் தலைவர் ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் பாலமுருகன், விஜயதாஸ், நரசிம்மராவ், கவுஸ்பீர் ஆகியோர், சென்னை நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12.00 மணியளவில் திடீர் சோதனை செய்தனர்.அப்போது செஞ்சி அடுத்த வி.நயம்பாடியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குறித்து விசாரித்தனர்.அவர் பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் என்பதும், அந்த உத்தரவை ரத்து செய்து, பணி வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பணம் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும், அலுவலகத்தில் உள்ள கணினி அறையில், ஒரு கவரில் இருந்து 30 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்தனர். அந்த பணத்திற்கு யாரும் உரிமை கோராதததால் அதனை கைப்பற்றினர்.மாலை 4:30 மணி வரை சோதனை முடிவில், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X