சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று மாடுகள் விஷம் வைத்து கொன்றவரை போலீசார் தேடல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
புவனகிரி-புவனகிரி அருகே மாடுகளுக்கு விஷம் வைத்து கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி சின்னப்பிள்ளை மகன் சக்திவேல்,37; விவசாயி. இவர் வீட்டில் வளர்க்கும் மாடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். இரவு வீட்டு தொழுவத்தில் மாடுகளை கட்டியிருந்தார். அவரது தாய், மாடுகளுக்கு தீவனம் வைத்துச் சென்றார்.சிறிது

புவனகிரி-புவனகிரி அருகே மாடுகளுக்கு விஷம் வைத்து கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி சின்னப்பிள்ளை மகன் சக்திவேல்,37; விவசாயி. இவர் வீட்டில் வளர்க்கும் மாடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். இரவு வீட்டு தொழுவத்தில் மாடுகளை கட்டியிருந்தார். அவரது தாய், மாடுகளுக்கு தீவனம் வைத்துச் சென்றார்.சிறிது நேரத்தில் மாடுகள் சத்தமிட்டன. வீட்டிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் 8 மாத சினை மாடு உட்பட மூன்று மாடுகள் அடுத்தடுத்து விழுந்து இறந்தன. மாடுகளுக்கு அடையாளம் தெரியாதவர்கள் விஷம் வைத்து கொன்றதாக சக்திவேல் புகார் கொடுத்துள்ளார். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். அழிச்சிக்குடியில் ஒன்றிய கவுன்சிலர் இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X