பொது செய்தி

தமிழ்நாடு

ஆள் மாறியுள்ளனர்; ஆட்சி மாறவில்லை

Added : அக் 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்-'தமிழகத்தில் ஆள் மாறியுள்ளனரே தவிர, ஆட்சி மாறவில்லை' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று தான் ஒவ்வொரு முறையும் போராடுகின்றோம்.நாங்கள்

விழுப்புரம்-'தமிழகத்தில் ஆள் மாறியுள்ளனரே தவிர, ஆட்சி மாறவில்லை' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று தான் ஒவ்வொரு முறையும் போராடுகின்றோம்.நாங்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வெற்றி தான். தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, 12 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளோம். தொடர்ந்து தனித்தே போட்டியிடுவோம்.நாங்கள் சீட்டுகளை கைப்பற்ற போராடவில்லை. இந்த நாட்டை கைப்பற்ற போராடுகின்றோம். தமிழகத்தில் ஆள் தான் மாறியுள்ளனர். ஆட்சி மாறவில்லை. பழனிசாமி சென்று, ஸ்டாலின் வந்துள்ளார்.மாநில அரசுகளின் தீர்மானங்களை, மத்திய அரசு மதிப்பதில்லை. காவிரி தண்ணீரை வழங்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், தண்ணீர் வழங்கவில்லை. 7 பேர் விடுதலை சட்டம் நிறைவேற்றினால், அதை ஏற்பதில்லை. இதை எதிர்த்து தமிழக ஆட்சியாளர்கள் சண்டை போடுவதில்லை.நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என தி.மு.க.,வினர் பரப்புரை செய்கின்றனர்.சிலரை கடத்திச் சென்று வைத்து, வாபஸ் பெற வைக்கின்றனர். போலீசார் மற்றும் கலெக்டர் இதை கண்டுகொள்வதில்லை.இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X