பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும்; கள்ளக்குறிச்சியில் அன்புமணி பேச்சு;

Added : அக் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-'தமிழகத்தை 54 ஆண்டுகளாக அ.தி.மு.க., - தி.மு.க., என மாறி மாறி ஆட்சி செய்து வருவதை மக்கள் மாற்ற வேண்டும்' என அன்புமணி பேசினார்.கள்ளக்குறிச்சி அடுத்த ஆற்றுமாமனந்தலில் பா.ம.க., சார்பில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அன்புமணி எம்.பி., பேசியதாவது:நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலை விட முக்கியமானது உள்ளாட்சித் தேர்தல். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி

கள்ளக்குறிச்சி-'தமிழகத்தை 54 ஆண்டுகளாக அ.தி.மு.க., - தி.மு.க., என மாறி மாறி ஆட்சி செய்து வருவதை மக்கள் மாற்ற வேண்டும்' என அன்புமணி பேசினார்.கள்ளக்குறிச்சி அடுத்த ஆற்றுமாமனந்தலில் பா.ம.க., சார்பில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அன்புமணி எம்.பி., பேசியதாவது:நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலை விட முக்கியமானது உள்ளாட்சித் தேர்தல். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளும் வசதி இந்த தேர்தல் மூலமாக உங்களுக்குக் கிடைக்கும்.இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் நீங்கள் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இந்த தேர்தலில் ஏற்படும் மாற்றம் அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்.நீங்கள் இதுவரை தேர்ந்தெடுத்த எம்.பி.,க்கள், எல்.எல்.ஏ.,க்கள் யாரும் உங்களைத் தேடி வரமாட்டார்கள். நீங்கள் தான் அவர்களைத் தேடிப் போக வேண்டும்.இதனால் நீங்கள் 5 ஆண்டு காலம் பாதிப்படைவீர்கள். எனவே, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் உங்களில் நல்லவர் ஒருவரை வெற்றி பெறச் செய்து தலைவராக தேர்ந்தெடுங்கள்.அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்து உங்களின் தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.தமிழகத்தில் 54 ஆண்டுகளாக நடந்து வரும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வின் ஆட்சி முறையை மக்கள் மாற்ற தயாராக வேண்டும்.கடந்த 42 ஆண்டுகளாக போராடி முதல் வெற்றியாக 10 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற்ற ராமதாஸ், அடுத்ததாக மற்ற பின்தங்கிய வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு பெற்றுத்தர போராடுவார். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X