முதல்வரின் செயல்பாடு நன்றாக உள்ளது; காங்., மாநிலத் தலைவர் அழகிரி புகழாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் செயல்பாடு நன்றாக உள்ளது; காங்., மாநிலத் தலைவர் அழகிரி புகழாரம்

Added : அக் 01, 2021
Share
விழுப்புரம்-'உள்ளாட்சித் தேர்தலில் காங்., மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என்று காங்., மாநிலத் தலைவர் அழகிரி கூறினார்.விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்., சார்பில் நடந்த வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தலில்

விழுப்புரம்-'உள்ளாட்சித் தேர்தலில் காங்., மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என்று காங்., மாநிலத் தலைவர் அழகிரி கூறினார்.விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்., சார்பில் நடந்த வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தலில் எங்கு போட்டியிடுவது மற்றும் சீட் குறைபாடு என்பது அனைவரின் மனதிலும் உள்ளது. பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அதைப் பற்றி பேசக்கூடாது.பா.ஜ., அதிகாரத்தில் இருப்பதால் முக்கிய பொறுப்புகளில் உள்ளோரை மாற்றும் போது எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் அதிகாரத்தில் இல்லாததால் சிறு, சிறு சலசலப்புகள் வருகிறது.தற்போது வரை முதல்வரின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. துவக்கத்தில் இருந்து திட்டமிட்டு, சிறப்பான பணிகளை ஸ்டாலின் செய்கிறார். வேளாண் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை பாராட்ட வேண்டும்.இதை அ.தி.மு.க., அரசு செய்யத் தவறினர். மத்திய அரசு தயவை எதிர்பார்த்து அவர்கள் எதிர்த்து பேசவில்லை. தி.மு.க., முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியது மக்கள், விவசாயிகள் மத்தியில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பா.ஜ., தவறுகளை சுட்டி காட்ட வேண்டிய தீர்மானங்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கை சிறப்பாக உள்ளது.இவ்வாறு அழகிரி கூறினார்.முன்னதாக செஞ்சி அடுத்த அப்பம்பட்டில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசுகையில், ' காங்., கட்சிக்கு நிரந்தரமான தலைவர் இல்லை. யார் முடிவு எடுக்கிறார்கள் என தெரியவில்லை என நம்முடைய தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். காங்., கட்சியில் கருத்து சுதந்திரம் உண்டு. இந்த கருத்து சுதந்திரமானதாகவும், சுத்தமானதாகவும் இல்லை.இந்தியாவில் இருக்கின்ற கோடிக்கணக்கான காங்., தோழர்களுக்கு நிரந்தரமான தலைவர் சோனியா. ஒருவரை ஒருவர் இணைக்கின்ற சக்தி சோனியாவுக்கும், ராகுலுக்கும் மட்டுமே உண்டு' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X