சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு கோவில்களில் திருட்டு

Added : அக் 01, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி-குறிஞ்சிப்பாடியில் இரண்டு கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, சின்னக்கடை வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு உண்டியலை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சபாகுமார் கொடுத்த

குறிஞ்சிப்பாடி-குறிஞ்சிப்பாடியில் இரண்டு கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, சின்னக்கடை வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு உண்டியலை உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சபாகுமார் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் உள்ள ஐந்து முக விநாயகர் கோவில் உண்டியலையும் உடைத்து காணிக்கையை மர்ம நபர்கள் கொள்ளைடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்பு பகுதியில் கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் குறிஞ்சிப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X