பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முடிவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்' என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி பார்வையாளர், டில்லி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படைத் தன்மையான அதிகாரத்தை பரவலாக்கும்

புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்' என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி பார்வையாளர், டில்லி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படைத் தன்மையான அதிகாரத்தை பரவலாக்கும் உள்ளாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.இதற்காக, ஆம் ஆத்மி கட்சி புதுச்சேரியில் ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒன்றிணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளன. புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நிர்வாகத் திறன் இல்லாத ஆட்சிகள் நடந்துள்ளன.இதனால் மாநிலம் மீளமுடியாத வகையில் கடனில் சிக்கித் தவிக்கிறது.இதனால் தரமான சாலை, குடிநீர், சுகாதாரம், நியாய விலை கடை, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட 14 வகையான அடிப்படை தேவைகள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். அதுபோல புதுச்சேரியிலும் அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு வழங்க முடியும். இதனை முன்வைத்து புதுச்சேரியில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X