புதுச்சேரி-மத்திய அரசு கோழி மற்றும் ஆடு வளர்ப்பிற்கு 50 மானிய கடன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசு தேசிய கால்நடை பணிக்குழுமத்தின் மறுசீரமைக்கப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.இதில் கிராமப்புற கோழிவளர்ப்பு, செம்மறி ஆடு , வெள்ளாடு, பன்றி வளர்ப்பு மற்றும் மாட்டுத் தீவனம் வளர்க்க விவசாயிகளை ஊக்கப்படுத்தியுள்ளது. இதற்காக 50 சதவீதம் முதன்மை மானியமாக தொழில் முனைவோர் திட்டங்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்களை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறையின் மாநில அமலாக்க முகாமை. மறைமலை அடிகள் சாலை ,புதுச்சேரி என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://ahd.py.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE