புதுச்சேரி-'கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, கோர்ட் உத்தரவுப்படி, மத்திய, மாநில அரசுகள் தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' என தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா விடுத்துள்ள அறிக்கை;குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களே கொரோனாவால் அதிகளவு இறந்துள்ளனர். இதனால் அந்த குடும்பங்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றன.கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்தால் அவர்கள் தொடர்ந்து படிக்க அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும், இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்தோம்.இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.எனவே, முதல்வர் சட்டமன்றத்தில் அளித்த உறுதியின்படி, புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாயும். மாநில அரசின் நிவாரணமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இறந்தவர்களின் குடும்பத்தினர் எங்கு பதிவு செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE