காண்ட்ராக்டரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் கட்டட காண்ட்ராக்டரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டை ராமதாஸ் வீதியை சேர்ந்தவர் முருகன், 5; .பில்டிங் காண்ட்ராக்டர். இவர், ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் புதிய கட்டடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த 28ம் தேதி மாலை 6.௦௦ மணியளவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து

புதுச்சேரி-புதுச்சேரியில் கட்டட காண்ட்ராக்டரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டை ராமதாஸ் வீதியை சேர்ந்தவர் முருகன், 5; .பில்டிங் காண்ட்ராக்டர். இவர், ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் புதிய கட்டடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த 28ம் தேதி மாலை 6.௦௦ மணியளவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவர், முருகனை, கத்திமுனையில் சுற்றி வளைத்து, மாமூல் கேட்டனர்.அவர் பணம் இல்லை என கூறியதால், அடித்து உதைத்த கும்பல், 'உறவினர்களிடம் பேசி பணம் எடுத்துவரச் சொல். இல்லாவிட்டால், கொலை செய்து விடுவோம்' என மிரட்டியது. .இதையடுத்து, முருகன் தனது மொபைல்போன் மூலம் உறவினர் லோகேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசினார்.லோகேஷ் 80 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அங்கு வந்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல், போலீசுக்கு தகவல் கொடுத்தால் கொலை செய்து விடுவோம். நாங்கள் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றது. தாக்குதலில் காயமடைந்த முருகன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.தகவல் அறிந்த கிழக்கு எஸ்.பி., ரட்சனா சிங், பெரியக்கடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர் அடையாளம் தெரியாத மூவர் மீது வழக்கு பதிந்தனர்.போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X