பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் சினிமா தியேட்டர்கள்; மேலும் சில தளர்வு

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வு அளித்து, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சினிமா தியேட்டர்கள் நள்ளிரவு 12.30 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் செப்.,15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வு அளித்து, அக்., 15ம்

புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வு அளித்து, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சினிமா தியேட்டர்கள் நள்ளிரவு 12.30 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் செப்.,15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வு அளித்து, அக்., 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, புதுச்சேரி மாநில செயலாக்க குழு உறுப்பினர் செயலர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.புதுச்சேரியில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்பட அனைத்து வகை சினிமா தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன், இரவு 9.௦௦ மணி வரை இயங்க முன்பு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.இனி, நள்ளிரவு 12.30 மணி வரை சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இரண்டாவது இரவு காட்சியை தியேட்டர்கள் இனி நடத்தலாம். இதுவரை, இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.௦௦ மணி வரை, இரவு நேர ஊடரங்கு அமலில் இருந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு, இரவு 11.௦௦ மணி முதல் அதிகாலை 5.௦௦ மணி வரை என மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இது தவிர, புதிய தளர்வு ஏதும் அறிவிக்கப் படவில்லை. மேலும், உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் விதிக்கும் கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் 25 பேரும், திருமண மண்டப நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும். இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் ஒன்று கூடுவதற்கான தடை தொடர்கிறது ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X