பொது செய்தி

இந்தியா

அரசியல்வாதிகள் சிபாரிசு: ஊழியர்களுக்கு ஜிப்மர் எச்சரிக்கை

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'சர்வீஸ் விஷயங்களில் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்த முயன்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என ஊழியர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஜிப்மரில் பணியாற்றும் அதிகாரிகள், சர்வீஸ் விஷயங்களில் நிர்வாகத்தை அணுகாமல், எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ,.க்களை சிபாரிசு பிடித்து காரியம் சாதித்து கொள்வது அதிகரித்துள்ளது. இது ஜிப்மர்

புதுச்சேரி-'சர்வீஸ் விஷயங்களில் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்த முயன்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என ஊழியர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஜிப்மரில் பணியாற்றும் அதிகாரிகள், சர்வீஸ் விஷயங்களில் நிர்வாகத்தை அணுகாமல், எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ,.க்களை சிபாரிசு பிடித்து காரியம் சாதித்து கொள்வது அதிகரித்துள்ளது. இது ஜிப்மர் நிர்வாகத்திற்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஜிப்மர் நிர்வாகப் பிரிவு துணை இயக்குனர், அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஜிப்மரில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்களின் சர்வீஸ் விஷயங்களில் மத்திய நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்காமல், எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை அணுகி வருகின்றனர். அரசு ஊழியர் நன்னடத்தை விதிப்படி, சர்வீஸ் விஷயங்களில் வெளியில் இருந்து செல்வாக்கு செலுத்த முயல்வது தவறு. இதுபோன்று செய்பவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X