பொது செய்தி

இந்தியா

பாதியில் முடிந்த ஆலோசனைக் கூட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நடந்த ஆளும் என்.ஆர்.காங்., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாதியில் முடிந்தது. உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக, என்.ஆர்.காங்.,- பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று அண்ணாமலை ஓட்டலில் துவங்கியது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பா.ஜ., மேலிட பொறுப்பாளர்

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நடந்த ஆளும் என்.ஆர்.காங்., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாதியில் முடிந்தது. உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக, என்.ஆர்.காங்.,- பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று அண்ணாமலை ஓட்டலில் துவங்கியது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் செம்மலை, செல்லுார் ராஜூ, சம்பத், மாநில செயலர் அன்பழகன், என்.ஆர்.காங்., செயலர் ஜெயபால், வழக்கறிஞர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகள் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சி தொடர்பான வழக்கை, இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்ட தகவல் கிடைத்தது. அதையடுத்து, 'கோர்ட் தீர்ப்பிற்கு பின் பேசிக் கொள்ளலாம்' என கூறி, உடனடியாக கூட்டத்தை முடித்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X