பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை முகாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் விவசாயிகள், பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம்நடந்தது.ரோட்டரி சங்கம் சார்பில் உலக இருதய நாளையொட்டி உழவர் சந்தையில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார். செயலாளர் சேகர் வரவேற்றார்.வேளாண்மை துணை இயக்குனர் உலகம்மை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் விவசாயிகள், பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம்நடந்தது.ரோட்டரி சங்கம் சார்பில் உலக இருதய நாளையொட்டி உழவர் சந்தையில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார். செயலாளர் சேகர் வரவேற்றார்.வேளாண்மை துணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமைத் துவக்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செவிலியர்கள் அபிநயா, சாந்தா, அருந்தவம், திவ்யா, கலைவாணி பரிசோதனை மேற்கொண்டனர்.முகாமில் உழவர் சந்தை நிர்வாக அதிகாரி இசைச்செல்வன், உதவி வேளாண் அலுவலர்கள் குமரேசன், இளவரசன் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 214 பேர் பயனடைந்தனர். முகாமில், ரோட்டரி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X