பொது செய்தி

தமிழ்நாடு

நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் பயிற்சி கூட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். தேர்தல் பார்வையாளர் பழனிசாமி பேசுகையில், 'மாவட்டத்தில் உள்ள 197 ஓட்டுச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊரகத் உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற குறிப்பிட்ட

விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். தேர்தல் பார்வையாளர் பழனிசாமி பேசுகையில், 'மாவட்டத்தில் உள்ள 197 ஓட்டுச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊரகத் உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் அனைத்து நிகழ்வுகளையும் துல்லியமாக கண்காணித்து அதற்குரிய படிவங்களில் விபரங்களை சேகரித்து நேரடியாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்தால் அதற்கான சிறப்பு அறிக்கையை நேரடியாக தேர்தல் பார்வையாளரிடம் சமர்ப்பித்து மேல் நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்' என்றார்.தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிவருத்ரய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X