சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் முறைகேடு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Added : அக் 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்-ஈச்சங்குப்பம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறி வேட்பாளர், கிராம மக்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.பிரம்மதேசம் அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி சக்குபாய். இவரது தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் காலை 11:00 மணியளவில் திடீரென அமர்ந்து

விழுப்புரம்-ஈச்சங்குப்பம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறி வேட்பாளர், கிராம மக்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.பிரம்மதேசம் அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி சக்குபாய். இவரது தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் காலை 11:00 மணியளவில் திடீரென அமர்ந்து முற்றுகையிட்டனர்.அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு:ஈச்சங்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு நான் (சக்குபாய்) மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த மனு ஏற்கப்பட்டு எனக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் ஈச்சங்குப்பம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 40 வாக்காளர் பெயர்களை நீக்கியும், புதியதாக வயது வரம்பு இல்லாத மற்றும் ஊராட்சி பகுதிக்கு சம்பந்தமின்றி, புதிய நபர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருதலைபட்சமாக செயல்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதியதாக சேர்த்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு மீதான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X