தமிழ்நாடு

திணறல்; ஓட்டு கேட்க உடன் வருவோருக்கு செலவு செய்ய முடியாமல்...கூடுதல் செலவால் விழி பிதுங்கும் உள்ளாட்சி வேட்பாளர்கள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் எதிர்பார்த்ததை விட தேர்தல் செலவு அதிகரித்து வருவதால் செலவுக்கு பணமின்றி விழிபிதுங்கி வருகின்றனர். எஞ்சியுள்ள நாட்களில் செலவுக்கு அஞ்சி சிலர் தேர்தல் பணிகளில் இருந்து பின் வாங்கி வருகின்றனர்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது லோக்சபா, சட்டசபை தேர்தலைப் போன்று அரசியல் சார்ந்து
 திணறல்; ஓட்டு கேட்க உடன் வருவோருக்கு செலவு செய்ய முடியாமல்...கூடுதல் செலவால் விழி பிதுங்கும் உள்ளாட்சி வேட்பாளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் எதிர்பார்த்ததை விட தேர்தல் செலவு அதிகரித்து வருவதால் செலவுக்கு பணமின்றி விழிபிதுங்கி வருகின்றனர்.

எஞ்சியுள்ள நாட்களில் செலவுக்கு அஞ்சி சிலர் தேர்தல் பணிகளில் இருந்து பின் வாங்கி வருகின்றனர்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது லோக்சபா, சட்டசபை தேர்தலைப் போன்று அரசியல் சார்ந்து இருப்பதில்லை. இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சில இடங்களில் சுயேச்சைகளின் ஆதிக்கமும் உண்டு.அரசியல் கட்சி சார்பில் போட்டியிட்டாலும் அதையும் கடந்து போட்டியிடுபவர்களின் உள்ளூர் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடுகின்றனர்.வழக்கமாக கடந்த தேர்தலை விட அடுத்து வரும் தேர்தலில் கூடுதல் செலவு இருக்கும். ஆனால் சமீப காலமாக லோக்சபா, சட்டசபை தேர்தல்களின் போது ஜனநாயக திருவிழா, பண நாயக திருவிழாவாக மாறியதன் விளைவு உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கத் துவங்கி விட்டது.இந்த தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்டாளர்கள் மனு தாக்கல் அன்று கிராமங்களில் இருந்து 100 முதல் 300 பேர் வரை வேன்களில் அழைத்து வந்தனர். அவர்களுக்கு செலவுக்கு 100 ரூபாய் பணம், 120 ரூபாய் மதிப்பில் பிரியாணி, இது மட்டுமின்றி 'சரக்கு' என கவனிப்புக்கு ஒரு நபருக்கு சராசரியாக 300 ரூபாய் வரை செலவானது. அன்று மட்டும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவானது. அடுத்தடுத்த நாட்களில் செலவு குறையும் என எதிர்பார்த்த வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தினமும் உடன் வருபவர்கள் 500 ரூபாய் வரை பணம் கேட்கின்றனர். நுாறு நாள் வேலைக்குப் போனால் எந்த வேலையும் செய்யாமல் 250 ரூபாய் வங்கி விடுவோம். எனவே ஓட்டு கேட்க 500 ரூபாய் வேண்டும் என கராறாக கேட்கின்றனர்.இவர்களுக்கு ஓட்டல்களில் இருந்து தினமும் சிக்கன் பிரியாணி, மாலையில் குடிமகன்களுக்கு 'சரக்கு' என நாள் ஒன்றுக்கு வேட்பாளரின் செலவு ஒரு லட்சம் ரூபாயை கடந்து விடுகிறது.அடுத்து ஓட்டுக்கு பணம் அல்லது பரிசு பொருள் தரவேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி சார்பில் பெரும் தொகை ஒதுக்கி விட்டதாக தெரிகிறது.சுயேச்சையாகவும், கட்சியில் இருந்து நிதி கிடைக்காத வேட்பாளர்களும் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கடன் கேட்டு திரிந்து வருகின்றனர். இப்போதே சில வேட்பாளர்கள் தேர்தல் செலவைப் பார்த்து மிரண்டு போட்டியில் இருந்து பின் வாங்கி வருகின்றனர். இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த முறை நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் மிகவும் காஸ்ட்லியான தேர்தலாக மாறியுள்ளது.இனி வரும் தேர்தல்களில் பணமின்றி தேர்தலை சந்திப்பது என்பது காணல் நீராக மாறி வருகிறது.அதிகாரிகள் பாராமுகம்வேட்பாளர்கள் செலவு செய்ய தேர்தல் ஆணையத்தால் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வட்ட கவுன்சிலர் வேட்பாளர் 1.7 லட்சம் ரூபாயும், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் 85 ஆயிரம் ரூபாயும், ஊராட்சித் தலைவர் வேட்பாளர் 34 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர் 9,000 ரூபாயும் செலவு செய்யலாம். இந்த செலவை அந்தந்த ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறை, அரசியல் கட்சிகளின் நெருக்கடி காரணமாக அதிகாரிகள் செலவைக் கணக்கெடுப்பதில் பாராமுகம் காட்டி வருகின்றனர்.

வெளியூர் பயணம்உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டு கூட வெற்றியை மாற்றி விடும். எனவே, சென்னை, பெங்களூரு, திருப்பூர் என வெளியூரில் வேலை செய்யும் உள்ளூர் வாக்காளர்களைத் தேடி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் படையெடுத்துள்ளனர். வெளியூரில் இருப்பவர்கள் வந்து செல்ல போக்குவரத்து செலவு, லீவு போடுவதால் ஏற்படும் நஷ்டம், ஓட்டுப்போட பணம் என நல்ல கவனிப்புடன் ஓட்டு போட அழைத்து வர ஏற்பாடு நடந்து வருகிறது.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X