பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மைய முன்னேற்பாடு பணி குறித்து தேர்தல் அலுவலர் ஆய்வு

Added : அக் 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்-ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்டமங்கலம் ஒன்றியம் ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.கண்டமங்கலம் ஒன்றிய ஓட்டுகள் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி மையத்தில் எண்ணப்படுகிறது.இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது, நுழைவு வாயில் வளாகம், மையத்தில் உள்ள

விழுப்புரம்-ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்டமங்கலம் ஒன்றியம் ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.கண்டமங்கலம் ஒன்றிய ஓட்டுகள் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி மையத்தில் எண்ணப்படுகிறது.இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது, நுழைவு வாயில் வளாகம், மையத்தில் உள்ள மேஜைகள், ஓட்டுபெட்டி வைக்கப்பட்டுள்ள அறை, கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும்.ஓட்டு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் அறை, ஓட்டு விபரங்களை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதி உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.ஓட்டு எண்ணும் முன் முகவர்களுக்கு பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டிகள் எண்ணிக்கையை சரிபார்க்க அறிவுறுத்தி, பின் சுற்றுவாரியாக ஓட்டு பெட்டிகளை கொண்டு செல்ல பணியாளர்களை நியமிக்க வேண்டும்.இந்த பணியாளர்கள் வயதானவர்களாக இல்லாமல் இளம் வயதினரை பணியமர்த்த வேண்டும் என அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், செயற்பொறியாளர் வெண்ணிலா உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X