பொது செய்தி

தமிழ்நாடு

துார்ந்த கழிவுநீர் கால்வாய்கள் விரைந்து சீரமைக்க கோரிக்கை

Added : அக் 01, 2021
Share
Advertisement
சின்னசேலம்-பருவமழை துவங்கும் முன் சின்னசேலம் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலம் நகர பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரங்களில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாததால், துார்ந்துள்ளன.மேலும், நகர பகுதிகளில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்படும் பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் கப்

சின்னசேலம்-பருவமழை துவங்கும் முன் சின்னசேலம் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலம் நகர பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரங்களில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாததால், துார்ந்துள்ளன.மேலும், நகர பகுதிகளில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்படும் பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் கப் போன்றவை காற்றில் அடித்துச்செல்லப்பட்டு கால்வாயில் விழுகிறது. இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியின்றி ஒரே இடத்தில் பல மாதங்கள் தேங்கி நிற்கிறது.இதுபோக மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் செல்வதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இது தவிர, சின்னசேலம் நகர பகுதி தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டுகளாகவே நேரடியாக ஏரியில் கலக்கிறது. இதனால், அப்பகுதியைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று பரவும் அபாயம் உள்ளது.குறிப்பாக கிணறுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், கழிவுநீர் கலந்து உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, ஏரியில் கலக்கும் கழிவுநீர் மற்றும் நகர பகுதி சாலையோரங்களில் உள்ள கால்வாய்களை மழைக்காலம் துவங்கும் முன் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X