பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் வடிகால் துாய்மைப் பணி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகராட்சியில், மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் துாய்மைப் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.தமிழக அரசு அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் துார்வாரி துாய்மைபடுத்திடும் பொருட்டு துாய்மை பணி முகாம் அமைத்திட அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகராட்சியில், மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் துாய்மைப் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.தமிழக அரசு அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் துார்வாரி துாய்மைபடுத்திடும் பொருட்டு துாய்மை பணி முகாம் அமைத்திட அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை துார்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ., நகர் பகுதியில் வடிகால்களின் இருபுறத்திலும் புல் மற்றும் துார்ந்துள்ள மண் ஆகியவை அகற்றப்பட்டு துாய்மைப் படுத்தும் பணி நடந்தது.இப்பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்து, வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் பாரதி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X