பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு இணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்திட இணையம் வழியாக விவசாயிகள் முன்பதிவு செய்து பயனடைய கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில், நடப்பு பருவம் 2021-22ம் ஆண்டுக்கு

கள்ளக்குறிச்சி-அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்திட இணையம் வழியாக விவசாயிகள் முன்பதிவு செய்து பயனடைய கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில், நடப்பு பருவம் 2021-22ம் ஆண்டுக்கு விவசாயிகள் நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்திட இ-டிபிசி இணையதளம் வாயிலாக விவசாயிகள் பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை எளிய முறையில் பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்திட வேண்டும்.இணையதளத்தில் பதிவு செய்தவுடன் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.பின், இணைய வழியின் மூலமாகவே வி.ஏ.ஓ.,வின் ஒப்புதல் பெற்று, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் விவசாயிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.இதன் மூலம் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X