சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அலுவலரிடம் தகராறு: இருவர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரை கடந்த 25ம் தேதி சின்னம் ஒதுக்குதல் மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறும் பணியில் இருந்தார்.அப்போது, 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரை கடந்த 25ம் தேதி சின்னம் ஒதுக்குதல் மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறும் பணியில் இருந்தார்.அப்போது, 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த சலத்மேரி வாபஸ் பெற்றதாக அ.தி.மு.க.,வினரிடம் தெரிவித்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து, அ.தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்த சலத்மேரியின் கணவர் ரங்கநாதபுரம் அந்தோணிசாமி, 56; அவரது மகன் ஆரோக்கியதாஸ், 30; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X