அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பஸ் டே' அத்துமீறல்; மக்கள் நீதி மய்யம் கண்டனம்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை : சென்னை நகரில், பஸ் டே' என்ற பெயரில் அத்துமீறும் மாணவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை: மாநகர பேருந்தில், மாணவர்கள் சிலர் படிக்கட்டில் பயணித்ததோடு மட்டுமின்றி, அராஜகத்தில் ஈடுபட்டு, கண்டித்த ஓட்டுனர் மீதும், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை மக்கள் நீதி மய்ய தொழிற்சங்க பேரவை வன்மையாக கண்டிக்கிறது
Bus Day, Kamal, Kamal Haasan, MNM, மக்கள் நீதி மய்யம், கமல்

சென்னை : சென்னை நகரில், பஸ் டே' என்ற பெயரில் அத்துமீறும் மாணவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை: மாநகர பேருந்தில், மாணவர்கள் சிலர் படிக்கட்டில் பயணித்ததோடு மட்டுமின்றி, அராஜகத்தில் ஈடுபட்டு, கண்டித்த ஓட்டுனர் மீதும், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை மக்கள் நீதி மய்ய தொழிற்சங்க பேரவை வன்மையாக கண்டிக்கிறது .ஒழுக்கத்தை கற்க வேண்டிய மாணவ சமுதாயத்தினர் சிலரின் ஒழுக்கக்கேடான செயல்களால், மாணவர்கள் தடம் மாறிச் செல்வதை அரசும், காவல்துறையும் கண்காணிக்க வேண்டும்.


latest tamil news


அத்துடன், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களும், மாணவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்பார்வையிட வேண்டும். பெற்றோரும், மாணவர்களின் நன்னடத்தைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஒழுக்கத்தை போதிக்கும் வகுப்புகளை, பள்ளி, கல்லுாரிகளில் கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேன்மையான மாணவ சமுதாயம் உருவாக, வழி காண வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-அக்-202109:36:07 IST Report Abuse
Lion Drsekar சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது, பெற்றோர்களுடன் பெண்கள் சென்றால் கிண்டல் செய்வது, படிப்பும் வேலையே இல்லாமல் பணக்கார வீட்டு பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்வது, யாரையுமே மதிக்காதது, குறிப்பாக சட்டத்தை எதிர்த்து , சமுதாயத்தை எதிர்த்து வெற்றிகாண்பது போன்றவற்றை புகுத்திக்கொண்டு வருவதே சினிமா மற்றும் ஊடகங்கள்தான் . எல்லாம் கடந்து விட்டது, அவரேவர்களாகவே திருந்தினால் மட்டுமே விடிவு பிறக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Rejeesh Kumar - Chennai,இந்தியா
01-அக்-202115:53:14 IST Report Abuse
Rejeesh Kumar என்னது பஸ் படிக்கட்டில் பயணமா? கருத்து என்னமோ சரியா தான் இருக்கு. ஆனால் வளையோசை கலகலகலவென... பாட்டுல ஆண்டவர் பஸ் படிக்கட்டு பயண சில்மிஷமெல்லாம் நியாபகத்துல வந்து தொலையுதே...
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
01-அக்-202114:32:31 IST Report Abuse
sridhar ஹப்பா , ஒரு கருத்து நல்லா சொல்லி இருக்காரு , பாராட்டலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X