சம்பளம் வழங்க கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பளம் வழங்க கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : அக் 01, 2021
Share
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.கம்மாபுரம் அடுத்த சு.கீனனுார் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு ஒரு மாதமாக சம்பளம் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை 5:00 மணிக்கு கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.கம்மாபுரம் அடுத்த சு.கீனனுார் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு ஒரு மாதமாக சம்பளம் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை 5:00 மணிக்கு கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். கிராம மக்களிடம் பி.டி.ஓ., காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார், இன்னும் 10 நாட்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் என கூறியதால் மாலை 5:30 மணிக்கு கலைந்து சென்றனர். ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X