சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கடலுார்-பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்தக் கோரி, வி.ஏ.ஓ.,க்கள் கடலுாரில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் கோட்டத்தில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுக்கு கடந்த மாதம் அறிவித்த பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்தவில்லை. வி.ஏ.ஓ.,க்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்

கடலுார்-பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்தக் கோரி, வி.ஏ.ஓ.,க்கள் கடலுாரில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் கோட்டத்தில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுக்கு கடந்த மாதம் அறிவித்த பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்தவில்லை. வி.ஏ.ஓ.,க்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலார் ஜெயராமன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுரேஷ், கடலுார் வட்டத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீராம், வட்டத் தலைவர்கள் குறிஞ்சிப்பாடி சரண்ராஜ், பண்ருட்டி செந்தில்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 8ம் தேதி பொது கலந்தாய்வு நடத்தப்படும் என ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு உறுதியளித்தார். அதையேற்று வி.ஏ.ஓ.,க்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X