அதிகரிக்கும் சைபர் மிரட்டல்கள்; அச்சத்தால் பணமிழக்கும் அபாயம்| Dinamalar

அதிகரிக்கும் சைபர் மிரட்டல்கள்; அச்சத்தால் பணமிழக்கும் அபாயம்

Added : அக் 01, 2021
Share
விருதுநகர்--விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கும் சைபர் குற்ற மிரட்டல்களால் மக்கள் அஞ்சி பணத்தை இழந்து திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதுசு புதுசாக சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.சைபர் கிரைம் குற்ற பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கும் தொனியில்

விருதுநகர்--விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கும் சைபர் குற்ற மிரட்டல்களால் மக்கள் அஞ்சி பணத்தை இழந்து திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதுசு புதுசாக சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.சைபர் கிரைம் குற்ற பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவோரும் அதிகரித்து வருகின்றனர்.மிரட்டும் தொனியில் பேசும் இவர்கள் தாங்கள் டில்லி வழக்கறிஞர் என கூறி பொதுமக்களின் பெயரை சரியாக தெரிந்து கொண்டு அலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர்.தங்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், வங்கி விவரங்களை கூறினால் நாங்களே வழக்கை முடித்து வைக்கிறோம் என்கின்றனர். பொதுமக்கள் உஷார் ஆனால், மிரட்டும் தொனியில் பேசி போலீஸ் வீட்டிற்கு வருவார் என அச்சமூட்டுகின்றனர். விவரம் தெரிந்தவர்கள் உஷார் ஆனாலும் அப்பாவிகள் மாட்டி கொள்கின்றனர். சைபர் கிரைம் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதே போல் தனியார் நிதி நிறுவனம் மூலம் தவணை கடன் முழுமையாக செலுத்திய பின்பும் பணம் செலுத்த வேண்டி உள்ளது. குறிப்பிட்ட லிங்க்ஐ க்ளிக் செய்யவும் என தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த குறிப்பிட்ட தனியார் நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டால் தாங்கள் குறுந்தகவல் அனுப்பவில்லை என்கின்றனர். இதே போல் வழக்கறிஞர் என கூறி வரும் அலைபேசி மிரட்டலில் 'ட்ரூ காலரில்' போய் தேடி பார்த்தால் அழைப்பு வந்த எண் இருப்பதில்லை. இவ்வகை நுாதன மிரட்டல் விடுப்போர் பலவகை தந்திரங்களை கையாளுகின்றனர். இது போன்ற மிரட்டல் தொனியில் பேசுவோரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிதி நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X