பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் அனுமதி பெற ஒரு முனை தீர்வு குழு

Added : அக் 01, 2021
Share
Advertisement
மாவட்ட தொழில் மையத்தின் நோக்கம்தொழில்முனைவோர், சிறுதொழில் புரிவோரின் வளர்ச்சி மேம்படுத்துவது முக்கிய நோக்கம். சுயதொழில் வாய்ப்பை உருவாக்க விரும்புவோருக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.முதலீட்டு மதிப்பில் ரூ.1 கோடி வரையும், விற்பனை, டர்ன் ஓவர் அடிப்படையில் ரூ.5 கோடி வரை விற்பனை செய்பவை குறு

மாவட்ட தொழில் மையத்தின் நோக்கம்தொழில்முனைவோர், சிறுதொழில் புரிவோரின் வளர்ச்சி மேம்படுத்துவது முக்கிய நோக்கம். சுயதொழில் வாய்ப்பை உருவாக்க விரும்புவோருக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.முதலீட்டு மதிப்பில் ரூ.1 கோடி வரையும், விற்பனை, டர்ன் ஓவர் அடிப்படையில் ரூ.5 கோடி வரை விற்பனை செய்பவை குறு நிறுவனங்கள். முதலீட்டில் ரூ.10 கோடி , டர்ன் ஓவரில் ரூ.50 கோடி வரை செய்பவை சிறு நிறுவனங்கள். ரூ.10 முதல் 50 கோடி வரை முதலீடும், ரூ.250 கோடி வரை டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் பற்றிசமுக, பொருளாதார ரீதியில் நலிவுற்ற பின் தங்கிய குறிப்பாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற, தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இதே போல் மத்திய அரசின் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நகர், கிராம இளைஞர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற்று புதிய உற்பத்தி, சேவை நிறுவனங்கள் அமைத்து வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புதிதாக தொழில் துவங்குவோருக்கான திட்டங்கள் என்ன.படித்த இளைஞர்களில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி, மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளித்து புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதே நோக்கம். இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு கலெக்டர் தலைமையிலான மாவட்ட தேர்வுக்குழு மூலமாக விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஆற்றல் தணிக்கை மானியம் என்றால் என்னவிருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியாக உள்ளன. ஆலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்களில் ஆற்றல் தணிக்கை செய்வதன் மூலம் மின் தொடர்பான பொருளாதார இழப்புகள் குறைக்க முடியும். முதல் முறையாக ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு செலுத்தும் கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.குறு, சிறு தொழில் வசதியாக்க மன்றத்தின் செயல்பாடு.குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருளை வாங்கும் நிறுவனம் உரிய காலத்தில் பணப்பட்டுவாடா செய்யாவிட்டால் அசல் தொகையுடன் 3 சதவீத கூட்டு வட்டியும் சேர்த்து வசூல் செய்ய வழிவகை செய்கிறது. http://www.samadhan.msme.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஒரு முனை தீர்வு குழு என்றால் என்ன குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட, ஒற்றை சாளர முறையில் அனைத்து வகை உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள் ஆகியவற்றை எவ்வித சிரமமுமின்றி விரைந்துவழங்க வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை துவங்கும் முன் செய்யப்படும் மின்வாரியம், தீயணைப்பு, சுகாதாரம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான அனுமதிகளை இந்த ஒரு முனை தீர்வு குழு மூலம் பெற்று கொள்ளலாம்.http://tnswp.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகள் என்னவிருதுநகர் மாவட்டத்தில் 152 வகையான சுயதொழில்கள் உள்ளன.தொழில் மையத்தின் திட்டங்கள், செயல்பாடு, திட்ட அறிக்கை, உறுதிமொழி படிவங்கள், புதிதாக தொழில் துவங்குவோருக்கு தேவையான முகவரிகள் அடங்கிய வழிகாட்டி கையேடு மாவட்ட தொழில் மையத்தில் கிடைக்கும். தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X