போலீஸ் செய்திகள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெண் மாயம் சாத்துார்: சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி 45. மனைவி அழகேஸ்வரி 40. திருமணம் நடந்து 25 ஆண்டுகளாகிறது . குழந்தை இல்லை. செப்.9ல் சாத்துாரில் உள்ள பைனான்சில் நகையை அடகு வைக்க சென்றவர் மாயமானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவனுக்கு கத்திக்குத்துசிவகாசி: எம்.புதுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதி 18

பெண் மாயம் சாத்துார்: சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி 45. மனைவி அழகேஸ்வரி 40. திருமணம் நடந்து 25 ஆண்டுகளாகிறது . குழந்தை இல்லை. செப்.9ல் சாத்துாரில் உள்ள பைனான்சில் நகையை அடகு வைக்க சென்றவர் மாயமானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவனுக்கு கத்திக்குத்துசிவகாசி: எம்.புதுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதி 18 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் இருந்தது. 17 வயது சிறுவன் அப்பகுதி முத்தாலம்மன் கோயில் அருகில் நின்ற போது 18 வயது சிறுவன் கத்தியால் குத்தினார். தடுக்க வந்த மற்றொரு 18 வயது சிறுவனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கத்தியை காட்டி வழிப்பறிசிவகாசி: நாரணாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் 31. டூ வீலரில் திருத்தங்கல் குறுக்குப் பாதையில் வந்தார். பனையடிபட்டியை சேர்ந்த சிவா 20, வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகாசியில் இருவர் தற்கொலைசிவகாசி: திருத்தங்கல் பள்ளபட்டி ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் பாலகுரு 57. நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.* எம்.புதுப்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி திருநாவுக்கரசு பாண்டியன் 26. ஊர் கோயில் விழாவில் மது அருந்தியதை மனைவி கண்டித்தார். மனமுடைந்த திருநாவுக்கரசு பாண்டியன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மனைவியை குத்திய கணவர்சாத்துார்: புதுச்சூரங்குடியை சேர்ந்தவர் முத்து மீனா 25. கணவர் பட்டம் புதுார் சுந்தரமூர்த்தி 30. 2 மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ எழுதி தரும்படி சாத்துார் மகளிர் போலீசில் சுந்தரமூர்த்தி கூறி உள்ளார். முத்துமீனா மறுக்கவே போலீசார் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அனுப்பினர். புதுச்சூரங்குடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி, மனைவி முத்து மீனாவை கத்தியால் குத்தினார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.ஆற்றில் மூழ்கி சிறுமி பலிராஜபாளையம்: சிவகாசி கீழநிறைமதியைசேர்ந்தவர் லாரி டிரைவர் திருஞானம். இவருக்கு மனைவி செல்வராணி , மகள் ஹாசினி 4, மகன் குணா 9, உள்ளனர். குடும்பத்துடன் அண்ணன் மகனுக்கு நேர்த்திகடன் செய்ய ராஜபாளையம் அய்யனார் கோயில் வந்தனர் . நிகழ்ச்சி முடிந்ததும் கருவாட்டு பாறை ஆற்று பகுதியில் தேங்கிய நீரில் குளித்துள்ளனர். இதில் ஹாசினி நீரில் மூழ்கி பலியானார். தெற்கு போலீசார் விசாரித்தனர்.மதுபாட்டில் திருடிய மூவர் கைதுநரிக்குடி: மே 25ல் முழு ஊரடங்கு நேரத்தில் நரிக்குடி அ.முக்குளம் டாஸ்மாக் கடை சுவற்றை உடைத்து,ரூ 3 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரத்து 500 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடினர். மதுரையை சேர்ந்த விஜி, அய்யனார், நாகராஜை நேற்று முன்தினம் அ.முக்குளம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X