பொது செய்தி

தமிழ்நாடு

1.28 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.208 கோடி சிகிச்சை தொகை : கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
விருதுநகர்-''1 லட்சத்து 28 ஆயிரத்து 376 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.208 கோடி 43 லட்சத்து 89 ஆயிரத்து 931,'' வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.விருதுநகரில் நடந்த முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் நான்காம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் தலைமை வகித்த அவர் பேசியதாவது: முதல்வர் காப்பீட்டு திட்டம் 2018

விருதுநகர்-''1 லட்சத்து 28 ஆயிரத்து 376 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.208 கோடி 43 லட்சத்து 89 ஆயிரத்து 931,'' வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.விருதுநகரில் நடந்த முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் நான்காம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் தலைமை வகித்த அவர் பேசியதாவது: முதல்வர் காப்பீட்டு திட்டம் 2018 முதல் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 28 ஆயிரத்து 376 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கான தொகையாக ரூ.208 கோடியே 43 லட்சத்து 89 ஆயிரத்து 931 வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் 732 பேருக்கு ரூ.5 கோடியே 83 லட்சத்து 37 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது, என்றார்.20 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். இணை இயக்குனர் மனோகரன், டீன் சங்குமணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X