பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
சாயல்குடி--சாயல்குடி சமுதாய கூடத்தில் கடலாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நடந்தது.தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மத்தியஅரசின் போஷன் அபியான்திட்டத்தின் சார்பில் நடந்த விழாவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பூட்டப்பட்டு, ஐந்து வகையான சாதம் பரிமாறப்பட்டது. சீமந்த பொருட்கள் வழங்கப்பட்டது.கடலாடி வட்டார
 கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு

சாயல்குடி--சாயல்குடி சமுதாய கூடத்தில் கடலாடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நடந்தது.தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மத்தியஅரசின் போஷன் அபியான்திட்டத்தின் சார்பில் நடந்த விழாவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பூட்டப்பட்டு, ஐந்து வகையான சாதம் பரிமாறப்பட்டது. சீமந்த பொருட்கள் வழங்கப்பட்டது.கடலாடி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மா தலைமை வகித்தார்.பேடு தொண்டு நிறுவனஅலுவலர் குருவேஸ்வரி முன்னிலை வகித்தார். வட்டார திட்ட உதவியாளர் வெள்ளை பாண்டியன் வரவேற்றார்.இதேபோன்று கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கிடாரம், ஒருவானேந்தல், கன்னிராஜபுரம், சிக்கல் ஆகிய இடங்களில் சமுதாய வளைகாப்பு நடந்தது. மேற்பார்வையாளர்கள் உமா, பண்ணையரசி, அமுதா, ரமணி உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.வட்டார ஒருங்கிணைப்பாளர் மைதிலி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X