பொது செய்தி

தமிழ்நாடு

டவுன் பஸ்களில் படியில் தொங்கும் மாணவர்கள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள்இயக்காததால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். டிரைவர், கண்டக்டர்களிடம் தகராறு செய்கின்றனர்.ராமநாதபுரம் நகர் கிளையில் இருந்து 40க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள்கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், காலை, மாலை பள்ளி, அலுவலக நேரங்களில்

ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள்இயக்காததால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். டிரைவர், கண்டக்டர்களிடம் தகராறு செய்கின்றனர்.ராமநாதபுரம் நகர் கிளையில் இருந்து 40க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள்கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், காலை, மாலை பள்ளி, அலுவலக நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படவில்லை.தற்போது டவுன் பஸ்களில் பெண்கள் இலவசபயணம் செய்வதால் பெண் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த நிறுத்தங்களுக்கு கூட 10 பேர் 20 பேர் என கூட்டம் கூட்டமாக ஏறுகின்றனர். இதனால் பஸ் புறப்பட்ட இரண்டு, மூன்று ஸ்டாப்களில் பஸ்சில் பயணிகள் கூட்டம் நிரம்பி விடுகிறது.மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்து பயணம் செய்கின்றனர்.ராமநாதபுரம்- பட்டணம்காத்தான் மார்க்கத்தில் நேற்று காலை 8:50 மணிக்கு ராமநாதபுரம் வந்த 32ம் நம்பர் பஸ்சில் இருபுற படிகளிலும் தொங்கியபடி மாணவர்கள் சென்றனர்.அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் கேட்ட போது, கூடுதல் பஸ்கள் இல்லை. அப்படியே பஸ் இருந்தாலும் டிரைவர், கண்டக்டர்கள் இல்லை. மேலும் கண்டம் செய்யப்பட்ட பஸ்களையே பெயின்ட் அடித்து இயக்குகின்றனர்.கூட்டத்திற்கு ஏற்ப காலை, மாலை பள்ளி நேரங்களிலாவது கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். இனி நவ.,1 முதல் 1 முதல் எட்டாம் வகுப்பு துவங்க உள்ள நிலையில், பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X