சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில்மாவட்ட கலெக்டர், தாலுகா அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தமீம்ராஜா, இணைச்செயலாளர்கள் காசிநாததுரை,

ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில்மாவட்ட கலெக்டர், தாலுகா அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தமீம்ராஜா, இணைச்செயலாளர்கள் காசிநாததுரை, வரதராஜன்முன்னிலைவகித்தனர்.ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நகரத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாசில்தார் ரவிச்சந்திரன்,செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.அப்போது புதிய பென்ஷன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்தும் வகையில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வருவாய் துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வுகளில் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.பரமக்குடி: பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளையின்போது, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பரமக்குடி வட்ட கிளை தலைவர் சடையாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிம் ராசா, மாநில செயற்குழு உறுப்பினர் அமர்நாத் பேசினர். இதில் தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டத் தலைவர் அமுதன் தலைமை வகித்தார். தாசில்தார் செந்தில்வேல்முருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வட்ட துணை தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X