அரசு வாகனங்களையும் சொந்த வாகனம்போல அலுவலர்கள் பராமரிக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு வாகனங்களையும் சொந்த வாகனம்போல அலுவலர்கள் பராமரிக்க வேண்டும்

Added : அக் 01, 2021
Share
ராமநாதபுரம்--தமிழக அரசுத்துறை அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்கள்பற்றி விபரங்களை சேகரித்தும், அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சர்வீஸ் செய்து தருவது, பறிமுதல் வாகனங்களுக்கு மதிப்பீடு சான்றிதழ் வழங்குவது, தரமாக உதிரிபாகங்களை மாற்றம் செய்து, பழுதுநீக்கி தரும் பணி மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு தானியங்கி பணிமனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இத்துறையின்

ராமநாதபுரம்--தமிழக அரசுத்துறை அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்கள்பற்றி விபரங்களை சேகரித்தும், அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சர்வீஸ் செய்து தருவது, பறிமுதல் வாகனங்களுக்கு மதிப்பீடு சான்றிதழ் வழங்குவது, தரமாக உதிரிபாகங்களை மாற்றம் செய்து, பழுதுநீக்கி தரும் பணி மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு தானியங்கி பணிமனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இத்துறையின் செயல்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட தானியங்கி பணிமனை பொறியாளர்எம்.ஜெ.சந்திரபிரகாஷ் கூறியதாவது:உங்கள் பணிமனையின் வேலை என்னஒவ்வொரு மாவட்ட தலைமையிடத்தில் தானியங்கி பணிமனை செயல்படுகிறது. ராமநாதபுரத்தில் பொறியாளர், மெக்கானிக் -2பேர், பீட்டர்-1, வரவேற்பாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் பணிபுரிகிறோம். அரசுத்துறை அலுவலர்களின் வாகனங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்கிறோம். ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 70 வாகனங்கள் வரை டயர், பேட்டரி, ஆயில், இன்ஜின் டாப் ஒர்க்ஸ் உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றன. தரமாக உதிரிபாகங்களை மாற்றம் செய்து, பழுதுநீக்கி ஓவர் ஆயில் செய்து தரும் பணியை மேற்கொள்கிறோம். இதுபோக மாதம்தோறும் குழுவாக சென்று அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்து கழிவுகள்மேற்கொள்கிறோம். இயக்க தகுதியான வாகனமாக இருக்கும் பட்சத்தில் 2 ஆண்டு இயக்குகிறோம் என்ற உறுதிமொழியை அலுவலகத்தில் பெற்றுகொள்கிறோம்.அதிகளவில் எந்த துறை வாகனங்கள் வருகின்றனமாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட அரசு வாகனங்கள் உள்ளன. இவற்றில் காவல்துறை, வேளாண்துறை, வருவாய்துறை வாகனங்கள் அதிகஅளவில் வேலைக்கு வருகின்றன. வாகனத்தை இயக்கி பார்த்து அதிலுள்ள குறைபாடுகளை குறிப்பெடுத்து அதன்பின் பணிமேற்கொள்ளப்படும். அலுவலகத்திற்குள் வரும் துறை அலுவலரின்பெயர், வாகனபதிவு எண் உள்ளிட்டவைகளை பதிவு செய்து வாகன விபர பதிவேடு தனியாக பராமரிக்கப்படுகிறது.வாகன பழுதுநீக்க செலவு எவ்வாறு கணக்கீடப்படுகிறதுஅலுவலகத்தில் பணபரிவர்த்தனை கிடையாது. அதற்கு காரணம் சென்னை வேளாச்சேரியில் உள்ள இயக்குனர் மோட்டார்வாகன பராமரிப்பு துறை அலுவலகத்தில் இருந்து உதிரிபாகங்கள், ஆயில் மொத்தமாக வந்துவிடும். இதுபோக சிலவற்றை மட்டும் இங்கு வாங்கி பயன்படுத்துகிறோம். அவற்றிற்கான செலவு விபரம் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்புகிறோம். வாகனத்தில் எந்தமாதிரியான பழுதுநீக்கி, உதிரிபாகங்கள் மாற்றப்பட்டுள்ளது ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கும் விபரப்பட்டியல் வழங்கப்படுகிறது.எத்தனை கி.மீ., வரை வாகனத்தை இயக்கலாம்ஒவ்வொரு வாகனத்தையும் 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம். வாகனத்தை ஓட்டுவது எவ்வளவு முக்கியமோ அதுபோல அதன் ஓட்டத்தை நிறுத்துவது மிக முக்கியும். அதாவது டீசல் வாகனமாக இருந்தால் 2.5 லட்சம் கி.மீ., பெட்ரோல் வாகனமாக இருந்தால் 2 லட்சம் கி.மீ., வரை ஓடிய பின் அதனை இயக்க கூடாது. வாகன தணிக்கையில் நன்றாக இருக்கும் பட்சத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு இயக்கலாம். அதற்கும் எங்கள் துறை சார்பில் வல்லுனர் குழு ஆய்வு செய்து சான்றிதழ் பெறுவது அவசியம்.அலுவலகங்களில் பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதே..அரசு அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்கள்டிரைவர், அதிகாரிகள் மாற்றம் ஆகிய காரணத்தினால் ஆவணங்களை பராமரிக்காமல் விட்டுவிடுவது தான் இதற்கு காரணமாகும். அரசு துறை அலுவலகங்களில் பயன்பாடு இல்லாமல் உள்ள பழைய வாகனங்களை கணக்கெடுத்து, அவற்றை ஏலம் விடுவதற்கு துரித நடவடிக்க மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே காவல்துறை, நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு எங்கள் துறை வல்லுனர் குழு மூலம் மதிப்பீடு செய்து அவற்றை ஏலம்விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு செலவை குறைத்து வாகனங்கள் பழுதை நீக்கி தருவது தான் எங்கள் பணிஆகும். அரசு வாகனங்களையும் சொந்த வாகனம் போல அலுவலர்கள் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X