பொது செய்தி

தமிழ்நாடு

இந்த வாழ்வை நமக்களித்த முதியோரை போற்றுவோம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--இன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரும் தனது முதுமைக்காலத்தில் பிறருக்கு சுமையில்லாத வாழ்க்கை வாழ விரும்புகின்றனர். விடாமுயற்சி, ஒழுக்கம் வாழ்க்கைமுறை, அனுபவங்களை சொல்லித்தருபவர்கள் நம் வீடுகளில் வாழும் முத்தோர்கள் மட்டுமே, அவர்களுக்குரிய மரியாதை வழங்கி, பாசத்துடன் பாதுகாக்க வேண்டியது மகன், மகள், இளம் தலை முறையினரின் கடமையாகும்.அந்த
 இந்த வாழ்வை நமக்களித்த முதியோரை போற்றுவோம்

ராமநாதபுரம்--இன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரும் தனது முதுமைக்காலத்தில் பிறருக்கு சுமையில்லாத வாழ்க்கை வாழ விரும்புகின்றனர்.

விடாமுயற்சி, ஒழுக்கம் வாழ்க்கைமுறை, அனுபவங்களை சொல்லித்தருபவர்கள் நம் வீடுகளில் வாழும் முத்தோர்கள் மட்டுமே, அவர்களுக்குரிய மரியாதை வழங்கி, பாசத்துடன் பாதுகாக்க வேண்டியது மகன், மகள், இளம் தலை முறையினரின் கடமையாகும்.அந்த வகையில் முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்.1ம் தேதி ''உலக முதியோர் தினம்'' கொண்டாடப்படுகிறது. இன்றயை இயந்திரமான காலக்கட்டத்தில் அக்கால கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையை பலர் பின்பற்றுவது இல்லை. திருமணமான சிலமாதங்களில் தனிக்குடித்தனம் செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக வருமானம் இல்லாத வயதான பெற்றோரை உதாசினப்படுத்துகின்றனர்.சிலர், தங்கள் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க கூடாது, தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக தனியாக ஓய்வுவயதிலும் பூக்கட்டுதல், விவசாயம், சுமைதுாக்குதல், சிறிய வியாபாரம் என பல்வேறு தொழில் செய்து வாழ்நாளை கழித்து வருகின்றனர். உழைக்க முடியாத இயலாத நிலையில் ஆதரவற்ற இல்லங்களில் சேரும் முதியவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துள்ளது.பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லைமு.வனசுந்தரி 61, பூ வியாபாரம், ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை பிள்ளையார் கோயில் பகுதியில்பூக்கட்டி வியாபாரம் செய்து வருகிறேன். 2 பெண்கள்,ஒரு மகன் உள்ளனர்.

அவர்களுக்கு திருமணமாகி தனி வாழ்கின்றனர். பேரன்,பேத்தியுடன் அவ்வப்போது வந்து செல்கின்றனர். நானாக விரும்பி பிள்ளைகளை தொந்தரவுசெய்யக் கூடாது என தனியாக வாழ்கிறேன். பூ வியாபாரத்தில் அன்றாட செலவிற்கு வருமானம் கிடைக்கிறது. எனது தேவையை பூர்த்தி செய்து கொள்கிறேன். சும்மா உட்காந்துவிட்டால் வீட்டிலேயே முடங்கி விடுவோம், முடியும் மட்டும் உழைத்து வாழ விரும்புகிறேன், இயலாத காலத்தில் எனது பிள்ளைகள்பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இன்றைய காலக்கட்டத்தில் வயதானவர்களை வாழ்த்த வேண்டாம்,அவர்களுக்குரிய மரியாதை தர வேண்டும்.உறவுகளை நம்பி வாழ முடியல, கைகொடுத்த காப்பகம்நடராஜன் 70, ராமநாதபுரம் முதியோர் காப்பகம்: கடந்த 2 ஆண்டுகளாக காப்பகத்தில் எனது மனைவி பானுமதி 68, உடன் தங்கியுள்ளேன். எங்களுக்கு குழந்தை கிடையாது, உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் காசு இருக்கும் வரை பழகினர். எனது அம்மா இறப்பிற்கு பிறகு வீட்டை விற்றுவிட்டேன். அதன் பின் உறவினர்கள் எங்களை தொந்தரவாக கருதினர். இதனால் மண்டபம் பகுதியில் எலக்ட்ரிசன் வேலை செய்து வாடகை வீட்டில் வசித்து வந்தோம். ஒருகட்டத்தில் முதுமை காரணாக வேலை செய்ய முடியல. இதனால் தற்போது ராமநாதபுரம் வள்ளலார் காப்பகத்தில் தங்கியுள்ளோம். இங்கு எங்களை பெற்ற பிள்ளை போல கவனிக்கின்றனர். எங்களை போன்ற ஆதரவற்ற முதியவர்கள் பலர் சிரமப்படுகின்றனர்,அவர்களை அரவணைத்து அரசு பாதுகாக்க வேண்டும்.பிள்ளைகளின் ஆதரவைஇழக்கும் பெற்றோர் அதிகரிப்புஜெ.ராஜவீர், நிர்வாகி, வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்: எனது தந்தை ஓய்வுபெற்ற துணை கலெக்டர் ஜோதிமுருகன் மூலம் 1993ல் வள்ளலாளர்பெயரில் ஆதரவற்ற மாணவர்கள், முதியோர் காப்பகம் தொடங்கப்பட்டது. தற்போது ஒரு தம்பதியினர், 3 வயதானவர்கள் தங்கியுள்ளனர். இதுபோக ஆதரவற்ற மாணவர்களும் உள்ளனர். பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு பிள்ளைகளின் ஆதரவு இழந்த பெற்றோர் பலர் காப்பகத்தை நாடி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவும், சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறோம். இலவச கண்சிகிச்சைமுகாம், மருத்துவ முகாம்கள்நடத்துகிறோம். மாவட்டத்தில் முதுகுளத்துார், பரமக்குடி, பார்த்திபனுார் ஆகிய இடங்களில் அரசுமுதியோர் இல்லம் உள்ளது.ராமநாத புரத்திலும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நமது இல்லத்தில் நம்முடன் வாழும் பெரி(முதி)யவர்கள் மற்றும் காப்பகங்களில் இறுதிக் காலத்தை கழிக்கும் முதியோர் ஆகியோரை இந்த உலக முதியோர் தினத்தில் வாழ்த்தி வணங்குவோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X