பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி சாலை மூடல்

Added : அக் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராமேஸ்வரம்--தனுஷ்கோடி தேசிய சாலை முன்அறிவிப்பு திடீரென முடியதால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் அவதிப்பட்டனர்.சென்னையில் உள்ள தனியார் விளையாட்டு அமைப்பு நேற்று தனுஷ்கோடி தேசிய சாலையில் சைக்கிள், ஓட்டபோட்டி நடத்தியது. இதில் பல மாநிலங்களில் இருந்து 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நேற்று காலை 6:00 மணி முதல் திடீரெனதேசிய சாலையை போலீசார்
 தனுஷ்கோடி சாலை மூடல்

ராமேஸ்வரம்--தனுஷ்கோடி தேசிய சாலை முன்அறிவிப்பு திடீரென முடியதால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் அவதிப்பட்டனர்.சென்னையில் உள்ள தனியார் விளையாட்டு அமைப்பு நேற்று தனுஷ்கோடி தேசிய சாலையில் சைக்கிள், ஓட்டபோட்டி நடத்தியது. இதில் பல மாநிலங்களில் இருந்து 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நேற்று காலை 6:00 மணி முதல் திடீரெனதேசிய சாலையை போலீசார் மூடினர். இதனை எதிர்பார்க்காத சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல முடியாமல், ஏராளமான வாகனத்தில் காத்திருந்தனர்.மேலும் தனுஷ்கோடியில் இருந்து மீன்களை லாரியில் கொண்டு வரமுடியாமல், மீனவர்கள் 20 கி.மீ., தூரம் நடந்தே மீன்களை தலையில் சுமந்தபடி ராமேஸ்வரம் வந்தனர்.இதனால் பெரும்பாலான மீன்கள் கெட்டு போனதால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மதியம் 1:30 பின் போட்டி முடிந்ததும்,தனுஷ்கோடிக்கு வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202112:18:04 IST Report Abuse
duruvasar சைக்கிள் போட்டி , எங்க முதல்வரின் பிடித்த பொழுதுபோக்கு. எதை நடத்தினால் அரசு தலையிடாது என்பதை உணர்ந்த தனியார் நிறுவனதிற்க்கு பாராட்டுக்கள். மார்க்கண்டேயர் களை உருவாக்கும் முயற்சிக்கு நன்றிகள் பல.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-அக்-202106:10:42 IST Report Abuse
Mani . V ஒரு தனியார் அமைப்புக்காக ஒரு தேசிய நெடுஞ்சாலையை முன்னறிவிப்பு இன்றி மூடுவது எவ்வளவு மூடத்தனமானது? என்ன செய்ய அவுங்ககிட்ட வாங்கின காசுக்கு அப்படித்தான் செய்ய முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X