பொது செய்தி

தமிழ்நாடு

டூ ஆறாம், எட்டு, ஒன்பது ஆகிய வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-மாவட்டத்தில் 2021--2022 நடப்பு கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மட்டுமின்றி ஆறாம், எட்டு, ஒன்பது ஆகிய வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்குரிய பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல்காரணமாக

ராமநாதபுரம்-மாவட்டத்தில் 2021--2022 நடப்பு கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மட்டுமின்றி ஆறாம், எட்டு, ஒன்பது ஆகிய வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்குரிய பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல்காரணமாக ஊரடங்கால்பள்ளிகள் திறக்கப்படாமல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன்-லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் பள்ளிகளில் நடக்கிறது. ஊரடங்கால் வருமானம் இழந்த பெற்றோர் ஐந்து முதல் ஒன்பது வகுப்புகளில் மாணவர்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக கடந்த கல்வி ஆண்டை காட்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில் சில பள்ளிகளுக்கு பழைய மாணவர்களுக்கு மட்டும் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.புதியதாக சேர்ந்தவர்களுக்கு பெயரளவில் தமிழ், ஆங்கிலம் என சில புத்தகம் கொடுத்து, முழுமையாக வழங்கப்பட வில்லை என பெற்றோர் புகார் கூறுகின்றனர். இதனால் ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அக்.,4 முதல் இரண்டாம் பருவம் தொடங்க உள்ளது. நவம்பரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆகையால் புதிய மாணவர்களுக்கும் அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினிகூறுகையில், 'பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாணவர்கள் உட்பட அனைவருக்கும் இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X