பொது செய்தி

தமிழ்நாடு

மண்டபத்தில் இரட்டைமடியில் மீன்பிடிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த விசைப்படகின் வலை, மீன்களை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மண்டபத்தில் செப்.,30ல் 500க்கு மேலான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் தமிழக அரசு தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடிப்பதாக மீன்வளத்துறைக்கு தகவல் வந்ததும், மரைன் போலீசார் உதவியுடன் மீன்வளத்துறை உதவி இயக்குநர்

ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த விசைப்படகின் வலை, மீன்களை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மண்டபத்தில் செப்.,30ல் 500க்கு மேலான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் தமிழக அரசு தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடிப்பதாக மீன்வளத்துறைக்கு தகவல் வந்ததும், மரைன் போலீசார் உதவியுடன் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி, அதிகாரிகள் படகுகளை சோதனையிட்டனர்.இரட்டைமடையில் மீன்பிடித்த முபராக் மனைவி நுார் என்பவரின்விசைப்படகை மீன்வளத்துறை, போலீசார் சோதனை செய்து அதில் இருந்த பேசாளை, சூடை மீன்களோடு, இரட்டைமடிவலையையும் பறிமுதல் செய்து மானிய டீசல், மீன்பிடி அனுமதி டோக்கனை ரத்து செய்தனர்.2வது தடவை: இப்படகு, இதேபோல் இரு வாரத்திற்கு முன் இரட்டைமடியில் மீன்பிடித்து மண்டபம்மீன்வளத்துறையினர் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்நிலையில் மீண்டும் இரட்டைமடியில் மீன்பிடித்தது சிறு தொழில் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இம்முறை அபராதம் இருமடங்காக விதிக்கவும், 3வது தடவை மீறினால் படகின் உரிமம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X