மின் இணைப்பு இல்லை அங்கன்வாடிகளில் அவதி

Added : அக் 01, 2021
Share
Advertisement
மானாமதுரை-மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திற்கும் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில்

மானாமதுரை-மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள குழந்தைகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திற்கும் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இம்மையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் மின் கட்டணம் செலுத்த தவறியதால் மின்இணைப்பை துண்டித்து விட்டனர்.தற்போது அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வரத்து உள்ளன. தற்போது மின் இணைப்பு இன்றி மின்விசிறி, குடிநீர் வசதியின்றி குழந்தைகள் தவிக்கின்றனர். அங்கன்வாடி மையங்களுக்கு மின் இணைப்பு வசதி செய்துதர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X