பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம்...

Added : அக் 01, 2021
Share
Advertisement
சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் ப.கோடீஸ்வரி கூறியதாவது,எத்தனை வாரியங்கள் உண்டுஇத்துறையின் கீழ் 17 வித தொழிலாளர் நல வாரியம் உண்டு. இதில் 53 வகை தொழில்களை அங்கீகரித்துள்ளோம். அமைப்பு சாரா தொழிலாளர்கள் 61 விதமான தொழில்கள் செய்வோர் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர்.வாரிய உறுப்பினராக தகுதிகள் என்னவயது 18 முதல் 60 க்குள் இருத்தல் வேண்டும். tnuwwb.tn.gov.in'' என்ற இணையதளத்தில்

சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் ப.கோடீஸ்வரி கூறியதாவது,எத்தனை வாரியங்கள் உண்டுஇத்துறையின் கீழ் 17 வித தொழிலாளர் நல வாரியம் உண்டு. இதில் 53 வகை தொழில்களை அங்கீகரித்துள்ளோம். அமைப்பு சாரா தொழிலாளர்கள் 61 விதமான தொழில்கள் செய்வோர் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர்.வாரிய உறுப்பினராக தகுதிகள் என்னவயது 18 முதல் 60 க்குள் இருத்தல் வேண்டும். tnuwwb.tn.gov.in'' என்ற இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம். ஒவ்வொரு 5 ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டும். இது குறித்த சந்தேகம், குறைகள் இருந்தால் 88255 45036 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.குறைகள் எந்தளவிற்கு நிவர்த்தியாகிறதுஇத்துறைக்கு மாதத்திற்கு 50 க்கும் மேற்பட்ட குறைதீர் மனுக்கள் வருகின்றன. அதனை முறையாக விசாரித்து உடனுக்குடன் தீர்வு காண்கிறோம்.இத்துறையில் உள்ள நலத்திட்டங்கள்பதிவு செய்த தொழிலாளர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, கண் கண்ணாடி, பென்ஷன், விபத்தில் இறப்பு, மாற்றுத்திறனாளி ஆதல், இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதி உதவி போன்ற திட்டங்கள் செயல்படுகிறது.எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்கட்டுமான நல வாரியம், அமைப்பு சாரா நல வாரியம் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 476 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.பெற்ற நலத்திட்ட உதவிகள்இம்மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மூலம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 341 பயனாளிகள் ரூ.28.06 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ளனர். இதில் 3166 தொழிலாளர்கள் ஓய்வுக்கு பின் பென்ஷன் வாங்குகின்றனர்.சிறப்பு நலத்திட்ட உதவிகள் உண்டாகொரோனாவின் போது தொழிலாளர் வாழ்வாதாரம் கருதி 24 ஆயிரத்து 73 பேர்களுக்கு உணவு தொகுப்பு 15 கிலோ அரிசி, துவரம்பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினோம்.மேலும் 21 ஆயிரத்து 11 தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.4.20 கோடி அளித்துள்ளோம். பொங்கல் பரிசாக 23 ஆயிரத்து 344 தொழிலாளர்களக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அளித்துள்ளோம்.மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு பதிவு அவசியமாமத்திய அரசு நாட்டில் உள்ள 43.7 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்து வருகிறது. இதற்காக ஒரு போர்ட்டலை' ஏற்படுத்தி அதில் தொழிலாளர்களின் முழு விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X