பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் நெல் விதைப்பு துவக்கம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
மானாமதுரை-மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தற்போது பெய்த மழையை நம்பி நேரடி விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, கோச்சடை, அய்யனார்குளம் மற்றும் இளையான்குடி அருகே பிராமனக்குறிச்சி,ஆலம்பச்சேரி,கீழநெட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்திய மழையை நம்பி 150 ஏக்கரில் நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு

மானாமதுரை-மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தற்போது பெய்த மழையை நம்பி நேரடி விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, கோச்சடை, அய்யனார்குளம் மற்றும் இளையான்குடி அருகே பிராமனக்குறிச்சி,ஆலம்பச்சேரி,கீழநெட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்திய மழையை நம்பி 150 ஏக்கரில் நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பகுதிகளை ஒட்டி வைகை ஆறு சென்றாலும் பல பகுதிகளில் ஆற்று நீர் வரத்து இல்லாததால் பருவ மழையை நம்பி பயிரிடுகின்றனர்.என்.எல்.ஆர்.,கோ43, பொன்னி உள்ளிட்ட 120 நாள் பயிர்களையே நேரடி விதைப்பு மூலம் பயிரிடுகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில் நேரடி விதைப்பின் மூலம் ஓரளவிற்கு விளைச்சல் கிடைப்பதால் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பையே விரும்புகின்றனர்.ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வருகின்றனர். தற்போது மழை பெய்ததால் ஏற்கனவே டிராக்டர்கள் மூலம் ஒரு உழவு செய்துள்ள நிலையில் விதைப்பிற்காக மறுபடியும் டிராக்டர் மூலம் உழவு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X